பாலக்கோட்டில் நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூலை, 2024

பாலக்கோட்டில் நடிகர் சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தினர் கேக் வெட்டி கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம்,  பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமணை  அருகே  நடிகர்சூர்யாவின்  49வது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா ரசிகர்  நற்பணிமன்ற ஒன்றிய தலைவர் முனிரத்தினம்,  செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.


மாவட்ட தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து பணிமணை  முன்பு உள்ள சூர்யா நற்பணி மன்றத்தின் முன்பு  கேக் வெட்டி கொண்டாடினர். அதனை தொடர்ந்து கடமடை கிராமத்தில் உள்ள காந்திஜி சேவாலயத்தில்  படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு இனிப்புக்கள்  மற்றும் காலை உணவு வழங்கினர். 


இந்நிகழ்ச்ச்சிக்கு மாவட்ட செயலாளர் விஜய், பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் ராமசந்திரன், வேலு,சின்னசாமி, நஞ்சப்பன், சத்தியமூர்த்தி  உள்ளிட்ட நிர்வாகிகள் திராளக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad