உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக மகாத்மாகாந்தி மாலை நேர பயிற்சி மையம் மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூலை, 2024

உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக மகாத்மாகாந்தி மாலை நேர பயிற்சி மையம் மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு.


தருமபுரி ஒட்டப்பட்டி வள்ளலார் அறிவாலயம் பள்ளியில் தருமபுரி உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக, எண்ணங்களின் சங்கமம் மகாத்மாகாந்தி மாலைநேர பயிற்சி மையம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதை பாராட்டி, பாராட்டு விழா நடைபெற்றது.


இந்நிகழ்வில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10, 11 ஆம் வகுப்பு மலைகிராம மாணவர்களுக்கு உதவு உள்ளங்கள் அறக்கட்டளை சார்பாக தலா - 1000/- ரூபாய் 21 மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவும் உள்ளங்கள் அரிமா கே. மாணிக்கம், நேவி மாணிக்கம், வள்ளலார் அறக்கட்டளை சிவக்குமார், வள்ளலார் அறிவாலயம் தாளாளர் அதியமான், திருமதி. மல்லிகாசிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்கள்.


நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எண்ணங்களின் சங்கமம் -ndso ஏற்பாடு செய்திருந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad