பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜூலை, 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை.

தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையின் சார்பாக ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு கல்வி மற்றும் தொழில்  சார்ந்த எழுதுவதின் நுட்பம் ' என்ற தலைப்பில் நடைபெற்றது. 


இதில்  நாகலாந்து மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத் துறை இணை பேராசிரியர் முனைவர் வசந்தன் அவர்களும்,  தர்மபுரி, செட்டிகரை, அரசு பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரேம்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினர். இவர்கள் தங்களது உரையில் இன்றைய காலகட்டத்தில் தங்களது கல்வி சார்ந்து எழுதுவதற்கான பயிற்சியையும் தொழில்நுட்பம் சார்ந்த எழுத்து பயிற்சியையும் எவ்வாறு தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர். 


மேலும் இன்றைய தொழில்நுட்பத்தில் கல்வி சார்ந்து எழுதும் பொழுது அதனை சிறப்பாக மேற்கொள்வதற்கு பயன்படக்கூடிய பல்வேறு செயலிகளை குறித்தும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து மாணாக்கர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் விரிவாக விடையளித்தனர். முன்னதாக  நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறை தலைவருமான பேராசிரியர் சி கோவிந்தராஜ் நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசி இப்பயிற்சி பட்டறையுடைய நோக்கத்தினை எடுத்துரைத்தார். 


தொடர்ந்து ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். இறுதியாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை முனைவர் கிருத்திகா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்வில்   அரசு கலைக் கல்லூரி, மேட்டூர் மற்றும் அரசு கலைக் கல்லூரி ஏரியூர், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை ஆகியவற்றைச் சார்ந்த 100 மேற்பட்ட மாணவ மாணவியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.  


இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவிகள் நேகா மற்றும் காவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆராய்ச்சி மாணாக்கர்கள் பழனிச்சாமி சமீர் மிதுன் மற்றும் முதுநிலை மாணாக்கர்கள் கோகுல், பாலச்சந்தர் பூஜாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad