அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பி. பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கிவைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பி. பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கிவைத்தார்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவிகள் பயன் பெரும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி. பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவிகள் பயன் பெரும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி. பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை இன்று (15.07.2024) துவக்கி வைத்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்க ”முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை” அறிவித்தார். மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் கடந்த 15.9.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். மேலும், 28.02.2023 முதல் 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யும் பணியை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் கடந்த 25.08.2023 அன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் 111 பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய 6126 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கடந்த 15.09.2022 அன்று தொடங்கப்பட்டது.


மேலும், தருமபுரியில் உள்ள அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 பள்ளிகளில் பயிலும் 51,527 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் கடந்த 25.08.2023 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவிகள் பயன் பெரும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பி. பள்ளிப்பட்டி செயின் மேரிஸ் துவக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, அவர்கள் முன்னிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.


தருமபுரியில் உள்ள அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1124 பள்ளிகளில் பயிலும் 52,462 மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் 8 பள்ளிகளில் பயிலும் 901 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 1132 பள்ளிகளில் பயிலும் 53,363 மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திரு. பி.பழனியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.பத்ஹீ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி.சுமதி, ஒன்றிய குழு தலைவர் திருமதி. உண்ணாமலை குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் திரு.இஸ்மாயில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ரவிச்சந்திரன் திரு.கிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுதாகர், வட்டார கல்வி அலுவலர்கள் திரு.பழனி, திரு ஜெயகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. திருமலா தினேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் திரு.மோகனதாஸ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad