புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்; மத்திய அரசை கண்டித்து பென்னாகரம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்; மத்திய அரசை கண்டித்து பென்னாகரம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.


புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்; மத்திய அரசை கண்டித்து பென்னாகரம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு.


3 புதிய குற்றவியல் சட்டங்கள் பாரதிய நியாய சன் ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா அதினியம், இன்று முதல் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது, இதனைக் கண்டித்து தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில், 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இன்று நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டமும், நாளை நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் நாளை மறுநாள், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும், வருகின்ற எட்டாம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர், மேலும் வருகின்ற எட்டாம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்த முடிவெடுத்து இருப்பதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்,


இந்த உண்ணாவிரதப் போராட்டம் பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் வீராசாமி, துணைத்தலைவர் பாலசரவணன், துணைச் செயலாளர் இளையராஜா, நூலகர் வெங்கடேசன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அரசை கண்டித்தும், புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், கோஷங்களை எழுப்பினர்.


வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக, நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad