தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு எதிராக போராட அனுமதி மறுப்பு; வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு எதிராக போராட அனுமதி மறுப்பு; வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வண்ணத்திப்பட்டி கிராமத்தில் உள்ள RSA TRADERAS என்ற பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் ஆலைக்கு  உள்ளாட்சி நிர்வாகமே அனுமதி வழங்காதே! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக, இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் காவல்துறை அனுமதி மறுப்பு.


நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு, வண்ணாத்திபட்டி குடியிருப்பில் பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் ஆலைக்கு அனுமதி தருகிறது.


பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலையால் துர்நாற்றம், காற்று மாசு, தண்ணீர் மாசு, மற்றும் புற்று நோய்கள் பரவும் அபாயங்கள் இருந்த போதும், அரசும் அதிகாரிகளும், ஆலை முதலாளிகளும் கள்ள கூட்டு வைத்துக் கொண்டு அனுமதி பெறாமலே கடந்த ஒரு ஆண்டு காலமாக பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் ஆலையை இயக்கி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.


தற்போது வரை உள்ளாட்சி நிர்வாகமோ, அல்லது நகர் ஊரமைப்பு இயக்கமோ இன்று வரை அனுமதி வழங்கவில்லை. ஊள்ளாட்சி  நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  16.7.20 24  இன்று வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெறயிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.


இந்நிலையில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சந்தித்து ஊர் பொதுமக்கள் மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக, RSA TRADERAS ஆலையை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த ஆலைக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad