பாலக்கோடு போக்குவரத்து பனிமணையில் இயங்கும் நகர பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்- மாணவர்களின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூலை, 2024

பாலக்கோடு போக்குவரத்து பனிமணையில் இயங்கும் நகர பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்- மாணவர்களின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பனிமணையில் இருந்து தினதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நகர மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லுவது தொடர்கதையாகவும், பயணத்தில் தீடீர் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள்  குறையவில்லை. 


பல இடங்களில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கப்படும் நிகழ்வுகள் நடக்கிறது. அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மாணவர்களை சமாளிப்பது பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அனைத்து அரசு பேருந்துகளிலும் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது வரை பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இயங்கும் நகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படாமல் உள்ளது. இது மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக பாலக்கோடு நகர பகுதியில் இயங்கும் பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் மாணவர்களின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad