காதல் விவகாரத்தில் பிரபல ஓட்டலில் பணியாளர் மர்மநபர்களால் கொடூரமாக தாக்கி குத்தி கொலை, சடலத்தை கைப்பற்றி கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக போலிஸ் நடவடிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூலை, 2024

காதல் விவகாரத்தில் பிரபல ஓட்டலில் பணியாளர் மர்மநபர்களால் கொடூரமாக தாக்கி குத்தி கொலை, சடலத்தை கைப்பற்றி கொலையாளிகளை பிடிக்க தீவிரமாக போலிஸ் நடவடிக்கை.


தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் புதிதாக துவக்கப்பட்ட தொப்பி வாப்பா பிரியாணி கடையில் சர்வராக வேலை செய்த முகமது ஆசிப்-27 தகப்பனார் பெயர். ஜாவித், இவர் A.ஜெட்டிஅள்ளி,  வெண்ணாம்பட்டி, பகுதியில் வசித்துவருகிறார்.   


நேற்று இரவு 9.45 மணியளவில்  25 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு மர்ம நபர்கள் ஹோட்டல் கடையில் உள்ளே நுழைந்து அவரை மார்பின் இருபுறமும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றனர். இதனை பார்த்த  கடையில் வேலை செய்த ஊழியர்கள்  அதிர்ச்சியடைந்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போது அவர் சிகிச்சை  பலன் பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


இது குறித்து தகவல் தெரிந்து தர்மபுரி  காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட முகமது ஆசிப் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி சேர்ந்த சித்தா மருத்துவர் சாரா (எ) சறஞ்சனா-25, என்ற பெண்ணை காதலித்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முகமது ஆசிப் பின் பெற்றோர் போன் மூலமாக சாராவின் பெற்றோரிடம் தங்களது மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வருவதாக கூறிய போது சாராவின் பெற்றோர் கடுமையாக திட்டி எச்சரித்ததாகவும் அது சம்பந்தமாக கொலை நடந்துள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. 


கொலை செய்யப்பட்ட முகமது ஆசிப் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.சுபேதார் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதால் கட்சியில் உள்ளவர்கள் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தொப்பி வாப்பா ஹோட்டல் கடை முன்பு கூட்டமாக உள்ளனர். 


மேலும் தர்மபுரி மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளர் முன்னா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளர் கரீம் ஆகியோர் உள்ளிட்ட முஸ்லிம்கள் கொலை செய்த நபர்கள் மற்றும் கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கொலை செய்தவர்கள் கூலிப்படையினர் என்றும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad