கவேரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர பாமகவால் மட்டுமே முடியும் - சௌமியா அன்புமணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 ஜூலை, 2024

கவேரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர பாமகவால் மட்டுமே முடியும் - சௌமியா அன்புமணி.


தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கவேரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வர பாமகவால் மட்டுமே முடியும் என சௌமியா அன்புமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேச்சு.


தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் அதக்கபாடி, செக்காரபட்டிசவூல்பட்டி, சின்னக்கம்பட்டி, குள்ளம்பட்டி, கானாபட்டி, ஒசஅள்ளி புதூர் உள்ளிட்ட 20 திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். 


பொதுமக்கள் இடையே பேசிய அவர்  தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தாலும் கூட எப்போதும் உங்களுடன் இருப்பேன் உங்கள் பிரச்சனைக்கு குரல் கொடுப்பேன் போராடுவேன். காவிரி உபநீர் திட்டம் சிப்காட் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற பாடுபடுவேன். உங்களின் வளர்ச்சி முக்கியம் அத்தனை பேருக்கும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பண பலம் அதிகாரபலம் கொண்டு வெற்றி பெற்றனர். ஆனால் எந்த இடைத்தேர்தலிலும் கிடைக்காத வாக்கு இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக அதிக வாக்குகள் பெற்றுள்ளது ஆகையால் இந்த வெற்றி பாமகவுக்கே சொந்தம். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் இல்லாத போது மட்டுமே கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றனர். 


ஆனால் தற்பொழுது கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளில் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் தற்போது உபரி நீர் கண்டிப்பாக திறந்து விட வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் காவிரியில் அதிகளவு தண்ணீர் வருவதால் இது குறித்து எந்த அரசியல்வாதியும் காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்து 6 மாத காலத்திற்கு பேச மாட்டார்கள். நீட் தேர்வால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலைப்பாட்டில் பாமக என்றைக்கும் பின்வாங்காது என அவர் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமிஉள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad