நிகழ்விற்கு சமூக ஆர்வலர் மு.பிரேம்குமார் தலைமை வகித்தார், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி இயற்கை முத்துக்குமார், ஏரியூர் ஒன்றியத்தின் தமிழியக்கத்தின் செயலாளர் நா.நாகராஜ், நாகமரை வார்டு உறுப்பினர் சின்னு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏரியூர் ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொருளாளர் கோ.முத்தரசு வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஏரியூர் ஒன்றிய செயலாளர் த.சந்தோஷ்குமார், சிகரல அள்ளி இயற்கை மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணன், ரகுமான், வைரம், குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மற்றும் தமிழியக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா.பழனி சிறப்புரை வழங்கினார்.
அவர் பேசுகையில் "பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிகம் நேரத்தை ஒதுக்கி பேச வேண்டும். இன்றைய காலத்தில் புத்தக வாசிப்பு என்பது அவசியமானது. பள்ளி குழந்தைகள் இருக்கும் வீட்டில் குறைந்தபட்சம் நீதி நெறி கதைகள் கொண்ட புத்தகங்கள் அவசியம் இருக்க வேண்டும். மரங்களை பாதுக்காத்து வளர்க்க வேண்டும். கைபேசியை நல்லதற்கு பயன்படுத்த வேண்டும் அதனை வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்த வேண்டும். நம்முடைய தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் மேலும் படிப்பதற்கும், விளையாடுவதற்கும் அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றார். நிறைவாக கல்லூரி மாணவர் பெ.நந்தகுமார் நன்றி கூறினார்.
நிகழ்வில் 65 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள், நோட், பேனா வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக