ஏரியூர் அருகே அரசு நிலத்தில் அனுமதியி்ன்றி நொறம்பு மண் திருடி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூலை, 2024

ஏரியூர் அருகே அரசு நிலத்தில் அனுமதியி்ன்றி நொறம்பு மண் திருடி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்


ஏரியூர் அருகே அரசு நிலத்தில் அனுமதியி்ன்றி நொறம்பு மண் திருடி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேவுள்ள அஜ்ஜனஅள்ளி கிராமத்திற்குட்பட்ட  சின்னவத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி தலமையில் கிராம மக்கள்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


புகார் மனு தொட்பாக கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கூறும்போது ஏரியூர் அருகேவுள்ள கீரகானூர் கிராமத்தை சேர்ந்த  சின்னதம்பி என்பவர்  மாந்தோட்டம் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக அவருடைய சொந்த பயன்பாட்டிற்காக ஜே சி பி, மற்றும் டிப்பர் லாரிகளை பயன்படுத்தி 300 யூனிட்டிற்கு மேல் நொறம்பு மண் திருடி வருவதாகவும், இது தொடர்பாக ஏரியூர் காவல் நிலையம், ஏரியூர் கிராம நிர்வாக அலுவலர், பென்னாகரம் வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் தற்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தி்ல்  புகார் மனு அளித்திருப்பதாகவும், தங்களது புகார் மனு மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட போவதை தவிர வேறு வழியில்லை என தெரிவி்த்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad