ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூலை, 2024

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி.


கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது நேற்று மாலை வரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 66 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் பரிசல் இயக்கும் தடை விதித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்தும் கரையோர உள்ள மக்களுக்கு பாதுகாப்பு பணிகள் குறித்தும்  இன்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி நேரில் பார்வையிட்டு வெள்ள அபாய எச்சரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்  திமுக  கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பே. சுப்ரமணியம் மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad