பாலக்கோடு பேருந்து நிலையத்தில் விதிகளை மீறிய டிப்டாப் சங்கர் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 ஜூலை, 2024

பாலக்கோடு பேருந்து நிலையத்தில் விதிகளை மீறிய டிப்டாப் சங்கர் ஆட்டோ பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பயன்படுத்தி வரும் பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.


பேருந்து செல்வதற்க்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் செயல்பட பேருராட்சி மற்றும் காவல்துறை சார்பில் சரவணா தியேட்டர், நகர பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், ஸ்தூபி மைதானம் என  தனித்தனியாக  ஆட்டோ ஸ்டேன்ட் அமைத்து கொடுக்கப்பட்டு அங்கிருந்து ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில ஆட்டோக்கள் போட்டி போட்டு கொண்டு பேருந்து நிலையத்திற்க்குள்  பேருந்திற்க்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி வருகின்றனர்.


இன்று காலை பாலக்கோடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்திற்க்கு இடையூறாக பிக்கிலியை சேர்ந்த சங்கர் (37) என்பவர் நிறுத்தி இருந்த ஆட்டோவை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர்கள்  கிருஷ்னன், கண்ணன் ஆகியோர் எடுக்க கூறி உள்ளனர். ஆட்டோ எடுக்க மறுத்தவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட மேலும் லைசென்ஸ் இல்லாமலும், சீருடை அனியாமலும் ஆட்டோவை இயக்கி வந்துள்ளார்.


இடையூறாக நிறுத்தி கொண்டு அகற்றாததால் ஆட்டோவிற்க்கு அபராதம் விதித்தது ஆட்டோவை பறிமுதல் செய்து பாலக்கோடு காவல் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad