மேதகு அப்துல் கலாம் நினைவு நாளில் சேவா ரத்னா விருது பெற்ற மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 27 ஜூலை, 2024

மேதகு அப்துல் கலாம் நினைவு நாளில் சேவா ரத்னா விருது பெற்ற மை தருமபுரி அமைப்பினர்.


தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் சிறப்பானதோர் சேவையை கடந்த 12 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டமின்றி பிற மாவட்டத்திலும் செய்து வருகின்றனர் மை தருமபுரி அமைப்பினர். 


தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தினந்தோறும் மதியம் மற்றும் மாலை குறைந்தது 300 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் உறவினர்கள் இல்லாமல் ஆதரவின்றி இறந்தோரின் புனித உடல்களை இதுவரை 102 நல்லடக்கம் செய்துள்ளனர். மை தருமபுரி அமைப்பின் மூலம் பத்தாயிரம் யூனிட் அலகு ரத்தம கொடையாக வழங்கி உள்ளனர்,இதன் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் 92 முறை தட்டணுக்கள் தானம் வழங்கியுள்ளார். 


மை தருமபுரி அமைப்பின் மனிதாபிமானமிக்க சேவைகளை பாராட்டும் விதமாக செங்கல்பட்டு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக அப்துல் கலாம் சேவா ரத்னா விருது வழங்கி கௌரவித்தனர். இந்த விருதினை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ், சிறப்பு விருந்தினராக சேலம் ஆர்ஆர் பிரியாணி தமிழ்செல்வன் ஆகியோர் மை தருமபுரி அமைப்பினருக்கு வழங்கி கௌரவித்தது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad