மேட்டூர் அணையின் கரையான முலவடை பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்ள வனத்துறையை அனுமதிக்க கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 ஜூலை, 2024

மேட்டூர் அணையின் கரையான முலவடை பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்ள வனத்துறையை அனுமதிக்க கோரிக்கை.

 

ஏரியூர் அருகே  பகுதியில் விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் மனு அளித்தனர்.


தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பனங்காடு, ஓட்டப்பள்ளம், முனியப்பன் கோவில் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியின் கரையோர கிராம மக்கள் நீர்வரத்து குறைந்த காலத்தில், விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்வதை தவிர்த்து வந்த விவசாயிகளை மாவட்ட வனத்துறையினர் அவ்வப்போது விவசாயப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்து குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். 


இந்த நிலையில் ஏரியூர் பனங்காடு, ஒட்ட பள்ளம், முனியப்பன் கோவில் பகுதி வரை உள்ள விவசாயிகள் நிலக்கடலை, மிளகாய், கம்பு, ராகி, சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்து வரும் நிலையில் முலவடை பகுதியில் சாகுபடி செய்வதை வனத்துறையினர் தடுத்து வருவதாகவும், விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோலை. அர்ஜுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், ஏமனூர் தர்மகர்த்தா கோவிந்தன், ஒட்டனூர் ராமசாமி ஆகியோர்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad