பெரும்பாலை அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 13 ஜூலை, 2024

பெரும்பாலை அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.


பெரும்பாலை அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூதநாயக்கன்பட்டி கிராமத்தில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலய ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனி மாதம் 14 ம் நாள் கொடியேற்றத்துடன் முகூர்த்தக்கால் நடப்பட்டு பம்பை மேளவாதியுங்கள் முழுங்க காவேரி புண்ணிய தீர்த்தக் குடம் எடுத்து  முளைப்பாலிகையை ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து  ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மனுக்கு மங்கல இசை முழங்க வாஸ்து ஹோமம், ரக் ஷோக் ஷன ஹோமம், திஷா ஹோமம், மிருத் சங்கிர கணம் அங்குரார்ப்பணம், ரக் ஷா  பந்தனம், பூத சுக்தி, கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் அன்னை பஞ்சபூத நாயகிக்கு முதற்கால பூஜை மூலமந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம் தேவ பாராயணம் பூர்ணாஷூதி உபச்சார பூஜை தீப ராதனை பிறை சூடிய அம்பிகைக்கு இரண்டாம் கால பூஜை இன்னமயிலும் நன்மை அருளும் அன்னைக்கு மூன்றாம் கால பூஜை இடர்களை நீக்கி இன்பம் அளிக்கும் அன்னைக்கு நான்காம் கால பூஜை ஆகிய 108 மூல மந்திர வேதங்கள் முழுங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


இந்த விழாவில் மகா கும்பாபிஷேக சர்வ சாதகம் சிவாச்சாரியார் பிரபாகரன் சிவன், பால குமரேசன் சிவம், முருகேசன், பிரசாந்த், ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த திருவிழா ஆனது சிறப்பாக நடைபெற்றது. 


இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad