ஏரியூர் அருகேயுள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

ஏரியூர் அருகேயுள்ள இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட கல்வி அலுவலர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை மாவட்ட கல்வி அலுவலர் சாப்பிட்டு  ஆய்வு செய்தார்.


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் இராமகொண்டஅள்ளியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் 300மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 12ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்தப் பள்ளியில் வருடாந்திர ஆண்டாய்வு நேற்று நடைபெற்றது. 


இந்த ஆண்டாய்வில் தர்மபுரிமாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் கலந்துகொண்டு மாணவர்களினகளின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவினை சாப்பிட்டு அதன் தரத்தினை ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது பள்ளித் துணை ஆய்வாளர்  பிரபபாவதி பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad