துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூலை, 2024

துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தருமபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் 05.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த 14.06.2024 அன்று தமிழகத்தில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக தருமபுரி தொடக்கக்கல்வி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்கக் கணினியை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலை அறிதல், மதிப்பீடுகள் செய்தல், Emis பணிகளை மேற்கொள்ளல், கிராமப்புறங்களில் இணைய அணுகல் (Internet) முறையை எளிதாக மேற்கொள்ளல், தமிழக கல்வி துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து App-களையும் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் நிலையினை மேம்படுத்திக்கொள்ளலாம்.


தனிப்பட்ட வளர்ச்சிக்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) தயாரிக்கும் பயிற்சி தொகுதிகளையும் பயன்படுத்த முடியும். ஆசிரியர்கள் கையடக்கக் கணினிகள் மூலம் இப்பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளலாம். ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை எளிதாக எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கண்காணிக்க முடியும்.


ஆசிரியர் ஒரே பாடத்தை வெவ்வேறு வழிகளில் கற்பிக்க மின் கற்றல் முறையைப் பயன்படுத்தலாம். இதனால் தனிப்பட்ட அணுகு முறையை வழங்குகிறது. இது கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை எல்லோருடனும் ஒருங்கிணைக்க உதவும். மாணவர்களின் கற்றல் விளைவுகளில் நேர் மறையான மாற்றத்தைக்கொண்டு வர உதவுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருமதி.மான்விழி, பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad