தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 ஜூலை, 2024

தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி, செம்மாண்டகுப்பம், கே.நடுஅள்ளி ஊராட்சிகளில் ரூ.64.60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி, செம்மாண்டகுப்பம், கே.நடுஅள்ளி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று (30.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (2023-2024) கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், செம்மாண்டகுப்பம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.20 இலட்சம் மதிப்பீட்டில் சமத்துவ சுடுகாடு மேம்பாடு செய்தல் பணிகளையும், கே.நடுஅள்ளி ஊராட்சி, பாறைக்கொட்டாய் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் திருமதி.மாதம்மாள் க/பெ.முனுசாமி என்பவர் நிலத்தில் மண் வரப்பு அமைக்கும் பணிகளையும், கே.நடுஅள்ளி ஊராட்சி, முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.15 இலட்சம் மதிப்பீட்டில் முனியப்பன் கோவில் கொட்டாய் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.27.25 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளையும், கே.நடுஅள்ளி ஊராட்சி, எம்.சவுளுர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 பயனிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.64.60 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இந்த ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, உதவி பொறியாளர்கள் திரு.சீனிவாசன், திருமதி.விக்னேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad