பாலக்கோடு வட்டத்தில்‌ "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" என்ற திட்டத்தின்‌ கீழ்‌ மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 ஜூலை, 2024

பாலக்கோடு வட்டத்தில்‌ "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" என்ற திட்டத்தின்‌ கீழ்‌ மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டத்தில்‌ "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" என்ற திட்டத்தின்‌ கீழ்‌, 2-வது நாளாக, அரசு நலத்திட்டங்களின்‌ செயல்பாடுகள்‌, திட்டப்பணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு அளிக்கப்படும்‌ சேவைகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி Sau. அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோடு வட்டத்தில்‌ "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" என்ற திட்டத்தின்‌ கீழ்‌, 2-வது நாளாக, அரசு நலத்திட்டங்களின்‌ செயல்பாடுகள்‌, திட்டப்பணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு அளிக்கப்படும்‌ சேவைகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி ஆப. அவர்கள்‌ இன்று (19.07.2024) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மக்களை நாடி, மக்கள்‌ குறைகளைக்‌ கேட்டு. உடனுக்குடன்‌ தீர்வு காண அரசு இயந்திரம்‌ களத்திற்கே வரும்‌ "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்‌. இத்திட்டத்தின்படி தருமபுரி மாவட்டத்தில்‌ 2024 ஜூலை மாதத்திற்கான "உங்களைத்‌ தேடி, உங்கள்‌ ஊரில்‌" திட்ட முகாம்‌ பாலக்கோடு வட்டத்தில்‌ 2-வது நாளாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி Sou, அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது. இம்முகாமில்‌ மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள்‌ கலந்துகொண்டனர்‌.


பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில்‌ இன்று தூய்மை பணியாளர்களின்‌ வருகை பதிவேடு மற்றும்‌ அலுவலகத்தில்‌ பராமரிக்கப்படும்‌ பதிவேடுகளையும்‌ ஆய்வு மேற்கொண்டார்‌. பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பனாரஸ்‌ தெருவில்‌ 2 இலட்சத்து 50 ஆயிரம்‌ கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்‌ தேக்க தொட்டியின்‌ மூலம்‌ பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ செய்யும்‌ பணிகளையும்‌, குடிநீர்‌ தொட்டி தூய்மை மேற்கொண்ட விவரங்கள்‌ குறித்து ஆய்வு செய்தார்‌.


மேலும்‌, குடியிருப்பு பகுதிகளில்‌ சீரான குடிநீர்‌ விநியோகம்‌ செய்வது குறித்து நேரில்‌ சென்று பொதுமக்களிடம்‌ குறைகளை கேட்டு அறிந்து, குடிநீரில்‌ குளோரின்‌: அளவுகள்‌ சரியாக உள்ளதா என்பது குறித்தும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌. நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர்‌ வழங்கப்பட வேண்டுமெனவும்‌, சுத்தமான குடிநீர்‌ வழங்கப்படுவது உறுதிசெய்திட வேண்டுமெனவும்‌ பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

கருத்துகள் இல்லை:

Post Top Ad