ஆவின் பால் தொழிற்சாலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

ஆவின் பால் தொழிற்சாலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாக பால் குளிரூட்டும் நிலையத்தில் புதிய 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை கடந்த 11.07.2024 அன்று துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக தருமபுரி பால் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, பால் பாக்கெட்களாக தயாரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் அடையும் வகையில் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாக பால் குளிரூட்டும் நிலையத்தில் புதிய 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலையை கடந்த 11.07.2024 அன்று துவக்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக தருமபுரி பால் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, பால் பாக்கெட்களாக தயாரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் அடையும் வகையில் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 26.08.2019 அன்று ஒருங்கிணைந்த தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட தனி ஒன்றியத்தில் உள்ளூர் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தின் பால் குளிரூட்டும் நிலையத்தில் புதியதாக 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்புதிய பால்பதப்படுத்தும் தொழிற்சாலையை கடந்த 11.07.2024 அன்று துவக்கி வைத்தார். தருமபுரி பால் குளிரூட்டும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய 50000 லிட்டர் கையாளும் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் பால் முதன் முறையாக தருமபுரி மாவட்டத்திலேயே பதப்படுத்தப்பட்டு தினசரி காலை, மாலை இரு வேளையும் தருமபுரி மாவட்ட பொது மக்கள் பயன் அடையும் வகையில் கொழுப்புச்சத்து-3.5% இதரசத்து 8.5% கொண்ட அரை லிட்டர் பால் ரூ.22.00/- மற்றும் கொழுப்புச்சத்து 6.0% இதரசத்து 9.0% கொண்ட அரை லிட்டர் பால் ரூ.30.00/-க்கு பால் பாக்கெட்கள் உள்ளூர் பால் விற்பனைக்கு துய்மையாகவும் நல்ல தரத்துடனும் இன்று (25.07.2024) முதல் தயாரித்து வழங்கி வருகிறது.


எனவே பொது மக்கள், வியாபாரிகள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் தருமபுரி ஆவின் பால்பண்ணையில் தயார் செய்யும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன் அடைந்து தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் உயரவும் மற்றும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்க்காகவும், நமது மாவட்ட வளர்ச்சிக்கும் உதவிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, பொது மேலாளர் மரு.கே.மாலதி, துணைப்பதிவாளர் (பால்வளம்) திரு.நவராஜ், மேலாளர் (பா.கா) கே.எஸ்.மணிவண்ணன், துணை மேலாளர் (பால்பதம்), துணை மேலாளர் (பொறியியல்) விரிவாக்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad