கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்பு கால பயிற்சி நிறைவு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்பு கால பயிற்சி நிறைவு விழா.


 தர்மபுரி மாவட்ட மைய நூலகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான படிப்பு கால பயிற்சி நிறைவு விழா மாவட்ட மைய நூலகத்தில் 15/7/2024- அன்று பிற்பகல் இரண்டு மணி அளவில் நடைபெற்றது. 


அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காரிமங்கலம் மாணவியர்கள். பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலக்கோடு மாணவ மாணவியர்கள்,   தொன் போஸ்கோ கல்லூரி தர்மபுரி மாணவ மாணவியர்கள் மற்றும் வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகர் திரு. இரா.மாதேஸ்வரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 


மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் திரு. கு. திருநாவுக்கரசு அவர்கள் இவ்விழாவினை தொகுத்து வழங்கினார். மாவட்ட நூலக அலுவலர் திருமதி அர. கோகிலவாணி அவர்கள் நூலகத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாக்கள் மற்றும் மற்ற விழாக்களை வரிசைப்படுத்தி அதன் பயனை உணரும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தலைமை உரை ஆற்றினார். செயலாளர் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் நூலகர் வாசகர் வட்டம் மருத்துவர் இரா. செந்தில் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவரின் வாழ்நாள் சாதனைகளையும் விளக்கிக் கூறி மாணவர்களிடையே நூலகத்தில் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் வகையில் அவர்களுக்கு அறிவுரை கூறி மாணவ மாணவியர்களுக்கான படிப்பு கால பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துரையாற்றினார். 


இதனைத் தொடர்ந்து திரு.மா. பழனி அவர்கள் தலைமையாசிரியர்,  முனைவர் ஆ.சு.ராஜா அவர்கள்   தொன்பாஸ்கோ கல்லூரி தர்மபுரி மற்றும்  திரு.மு. செந்தில் அவர்கள் துணைத்தலைவர் தமிழ் துறை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தர்மபுரி அவர்களும் நூலகத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவின் நிறைவாக முனைவர் மு.சென்னப்பன்உதவி பேராசிரியர் தமிழ்த்துறை தொன்பாஸ்கோ கல்லூரி தர்மபுரி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad