பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கான மூன்று நாள் புத்தாக்க பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கில துறையில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கான மூன்று நாள் புத்தாக்க பயிற்சி.


தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறையில் முதுநிலை முதலாமாண்டு மாணாக்கர்களுக்கான மூன்று நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதன் முதல் நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை தலைவர் முனைவர் செல்வ பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'சிறந்த மனிதனுக்கான சிறந்த கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாம் நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய மேலாண்மை துறை தலைவர் முனைவர் கார்த்திகேயன் 'தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார். 


தொடர்ந்து மூன்றாம் நாள் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியியல் துறை தலைவர் முனைவர் நந்தகுமார் ' ஊடகத்துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் பெரியார் பல்கலைக்கழக புல முதன்மையரும பொருளியல் துறை தலைவருமான முனைவர் ஜெயராமன் 'தலைமை ஏற்க கற்றுக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார். 


முன்னதாக இந்நிகழ்வுக்கான துவக்க விழாவில் ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவரும் பேராசிரியருமான முனைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். இறுதியாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கிருத்திகா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை இரண்டாம் ஆண்டு மாணவிகள் காவியா மற்றும் ஹாஜிரா ஆகியோர் தொகுத்து வழங்கினர். 


இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இரண்டாம் ஆண்டு மாணாக்கர்கள் கோகுல் விஜய் ஸ்ரீ மதுமிதா, முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் பிரசாந்த் தேன்மொழி மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் சரண்யா மற்றும் மீனா ஆகியோர் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad