பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் யு.ஜி. மாணவர் சேர்க்கான கலந்தாய்வு நாளை நடைபெறும் கல்லூரி முதல்வர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 15 ஜூலை, 2024

பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரியில் யு.ஜி. மாணவர் சேர்க்கான கலந்தாய்வு நாளை நடைபெறும் கல்லூரி முதல்வர் தகவல்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024- 25ம் ஆண்டிற்கான தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல், பொதுநிர்வாகம் உள்ளிட்ட 19 பாட பிரிவுகளுக்கான இளங்கலை பட்டபடிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு  சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 28 ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.


நாளை 16ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad