தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவருக்கு இளம்புயல் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஊக்கத்தொகையாக௹பாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த ஊக்கத்தொகையை மன்றத்தின் சார்பாக ஊர் கவுண்டர் அன்பழகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது மன்றத்தின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் மன்றத்தில் உள்ள பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக