பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நெற்றியில் நாமம் போட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நெற்றியில் நாமம் போட்டு மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்துநிலையம் முன்பு ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை  மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய துணைத் தலைவர் திம்மன் தலைமையில்  நடைப்பெற்றது. முன்னிலை ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் வகித்து கண்டன உரையை துவக்கி வைத்தார்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய், 2016ம் ஆண்டு மாற்று திறனாளிகளுக்கான நலச் சட்டத்தை அமல்படுத்து,  மாற்று திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறைக்கப்பட்டதை கண்டித்தும், ஊனமுற்றவர்களுக்கான குடும்ப அட்டையில் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டஅட்டைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து நெற்றியில் நாமம் போட்டு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கருவூரான், மாநில பொருளாளர் சக்ரவர்த்தி மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை  மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பிணர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad