கடகத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுகு சாலை வேண்டி கே.பி.அன்பழகன் எம்.எல். ஏ தலைமையில் மறியல் போராட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

கடகத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுகு சாலை வேண்டி கே.பி.அன்பழகன் எம்.எல். ஏ தலைமையில் மறியல் போராட்டம்.


தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டை முதல் ஓசூர் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறு வழிச்சாலையில் தருமபுரிக்கு செல்ல கடகத்தூர் பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டிருந்தது.


ஆனால் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்று சாலை பயன்பாட்டிற்க்கு வந்த நிலையில் இதுவரை கடகத்தூர் பகுதியில் அனுகு சாலை  அமைக்கபடதாதல், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, இராயக்கோட்டை பகுதியில் இருந்து தினந்தோறும் தர்மபுரிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தடங்கம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் சென்று மீண்டும் தர்மபுரி சாலைக்கு திரும்பி வர வேண்டி உள்ளது. இதனால் நேரம் மற்றும் பணம் விரயமாகி வந்தது. மேலும் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள்  ஏற்ப்பட்டு உயிர் சேதமும் படுகாயங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலையில் இன்று, காலை 11 மணிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் கடகத்தூர் நெடுஞ்சாலையில் அனுகு சாலை அமைக்க வேண்டி மறியலில் ஈடுபட்டனர்.


தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்து உடனடியாக  பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் சாலை சரிசெய்த பிறகே இங்கிருந்து செல்வதாக உறுதியாக தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி.மூலம் கடகத்தூர் சாலையில் வழிப்பாதை ஏற்படுத்தி அணுகு சாலை சீரமைக்கும்  பணிகள் தொடங்கப்பட்டன. அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.


அணுகு சாலை அமைக்க வழிவகை செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள்  நன்றி தெரிவித்தனர். இந்த மறியல் போரட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி. பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், அதிமுக தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, வீரமணி, இரவிச்சந்திரன், புதுர் சுப்ரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad