மொரப்பூர் அருகே நவலையில் விசிக சார்பில் முப்பெரும் விழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூலை, 2024

மொரப்பூர் அருகே நவலையில் விசிக சார்பில் முப்பெரும் விழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமத்தில் டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா சிதம்பரம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி விழா விசி கட்சியின் அங்கீகார விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது இவ்விழா வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் நடக்கிறது.


விழாவில் வியாழன் காலை 9 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றி வைத்து 2000 நபர்களுக்கு இனிப்புகள் வழங்குவது பிற்பகல் 12.மணிக்கு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நவலையில்  உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கி பள்ளி மாணவிகளை கௌரவித்தல் நான்கு மணிக்கு அம்பேத்கர் சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபடுதல் மாலை 6 மணிக்கு உள்ளூர் இளைஞர்களுக்கான நடன நாட்டிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னோடிகளுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு மற்றும் கௌரவித்தல் இதையடுத்து காலை 10 மணிமுதல் பறை இசையுடன் வாண வேடிக்கைகளுடன் மாவிளக்கு ஊர்வலத்துடன்  தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது ஆறாம் தேதி சனிக்கிழமை காலை குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாட்டு போட்டி பேச்சுப்போட்டி உள்ளூர் சிறுவர் சிறுவர்களுக்கான நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழா காலை 11 மணி முதல்  அன்னதானம் நடைபெறும் இரவு 8 மணி பாஞ்சால குறவஞ்சி எனும் தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது விழாவிற்கான  ஏற்பாடுகளை விசிக மற்றும் ஊர் பொதுமக்கள்  செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad