திம்லாமேடு கிராமத்தில் ஸ்ரீ பொன்மாரியம்மன் திருவிழாவில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 ஜூலை, 2024

திம்லாமேடு கிராமத்தில் ஸ்ரீ பொன்மாரியம்மன் திருவிழாவில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்லாமேடு கிராமத்தில் ஸ்ரீ பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைப்பெற்றது. இத்திருவிழாவானது கடந்த 1ம் தேதி திங்கட்கிழமைகிழமை கொடியேற்றி கங்கனம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.


நேற்று அம்மனுக்கு கூல் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய நாளான  இன்று அதிகாலை முதலே ஸ்ரீ பொன்மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேலும் பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், ,  கரகம் எடுத்தும், தீசட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மன் வேடம் அணிந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக  சென்று கோவிலை  அடைந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை  ஊர் கவுண்டர்கள, மந்திரிகவுண்டர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர்  செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad