களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுக்க ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஜூலை, 2024

களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுக்க ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.07.2024) வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று தலைமைசெயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளிலிருந்து களிமண் / வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணம் இன்றி எடுத்து பயன்பெறுவதற்காக தொடங்கி வைக்கப்பட்டது. 


இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட 95 நீர்நிலைகளில் களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெற இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்றைய தினம் வழங்கினார்.


தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டு, இவ்வரசிதழ்களை dharmapuri.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் / களிமண் எடுத்து பயன்பெற https://tnesevai.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (கனிமம்) திருமதி.ரா.ஜெயந்தி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad