விதைப்பு தவிர்த்தல், விதைப்பு தோல்வியுறுதல், பயிரிட அபாயம் ஏற்படும் சூழ்நிலையில், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர்காலத்தில் பயிர் இழப்பு, அறுவடைக்குப்பின் ஏற்படும் மகசூல் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடற்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீடு செய்ய தேவைப்படும் ஆவணங்கள் பின்வருமாறு:
- முன்மொழிவு படிவம் (PROPOSAL FORM)
- பதிவு படிவம்,சிட்டா அடங்கல் (அ) பயிர் சாகுபடி சான்று
- ஆதார் அட்டை மற்றும்
- வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல்.
பயிர் காப்பீடு தொகை, பிரீமியம் தொகை மற்றும் காலக்கெடு : ஏக்கருக்கு காப்பீடு பிரீமியம் கட்டணமாக நெற்பயிருக்கு ரூ.742, மக்காட்சோளத்திற்கு ரூ.524, துவரை ரூ.308, நிலக்கடலைக்கு ரூ.426, பருத்திக்கு ரூ.508, மற்றும் ராகி பயிருக்கு ரூ.228 ஆகும். நெல் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு 2024 ம் ஆண்டு ஜீலை 31 ம் தேதியும் ராகி பயிருக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும் துவரை பயிருக்கு செப்டம்பர் 16 ம் தேதியும் மற்றும் காப்பீடு 30ம் தேதியும் பயிர் செய்ய காலக்கெடு பருத்தி பயிருக்கு செப்டம்பர் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
எனவே காரீப் பருவம் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பெருமளவில் சேர்ந்து பயனடையமாறு பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.மா.அருள்மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக