ஊட்டமலை கிராமத்தில் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஜூலை, 2024

ஊட்டமலை கிராமத்தில் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.


தமிழகத்தின் பிரபலமான சுற்றுலா தளம் ஒகேனக்கல் ஆகும்.இந்த சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.


ஒகேனக்கலை அடுத்து அமைந்துள்ள கிராமம் ஊட்டமலை. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 125 குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். நாள்தோறும் சாலைகளை கடந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். ஒகேனக்கல் அஞ்செட்டி சாலையில் ஊட்டமலை அமைந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும். அப்போது குழந்தைகள் சாலையை கடப்பதற்கு அவதிப்படுகின்றனர்.


மேலும் வாகனங்கள் வேகமாக வரும் சூழலும் உள்ளது. இது குறித்து பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மன அழுத்தம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் இது மட்டுமல்லாமல் பென்னாகரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று பலமுறை கூறியும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சாலையை கடக்கும் குழந்தைகள் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பெற்றோர்கள்  வேதனை தெரிவிக்கின்றனர். 


எனவே  மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் வேக தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்கும் போது பள்ளிக் குழந்தைகள் சாலையை  கடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad