தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சாவடிதெருவில், சட்ட தூண்கள் அறக்கட்டளை சார்பில் சட்ட பயிற்சி அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் பி.கே.சிவா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ், ஒன்றிய தலைவர் குமார். ஒன்றிய செயலாளர் கந்தசாமி, ஒன்றிய பொருளாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்ட தூண்கள் அறக்கட்டளை நிறுவனர் குனசேகரன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் பிலிப், ஓய்வு பெற்ற நீதிமன்ற எழுத்தர் காவேரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினர்.
இதில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது கோரிக்கை மனு, நிர்வாக செயல்பாடு. அரசு அலுவலகங்களின் வரவு செலவு கணக்குகளை எவ்வாறு தெரிந்து கொள்வது மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களில் இருந்து தேவையான விபரங்களை எவ்வாறு பெறுவது என்பன குறித்து சட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவா, முரளி, மாவட்ட பொருளாளர் ரவி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக