மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜூலை, 2024

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் மாதாந்திர மின் கணக்கீட்டை முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ஏ.குமார் கலந்து கொண்டு பேசுகையில் மத்திய மாநில அரசுகள் மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசின் தனியார் மயமாக்களுக்கு இரையாகாமல் அனைவருக்கும் மின்சாரம் மக்கள் வாங்கும் கட்டணத்தில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை மாநில அரசே உற்பத்தி செய்யும் வகையில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,  அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அதீத கொள்முதல் விலையை குறைக்க வலியுறுத்தியும்  விளக்க உரை ஆற்றினார்.


இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கே.என்.ஏழுமலை எஸ்.கே கோவிந்தன், ஏ.நேரு சி.பழனி வி.ஜெயகாந்தன் எஸ்.தனலட்சுமி கே.டி.ஜடையாண்டி கே.குமரேசன் எஸ்.அண்ணாமலை ஏ.லூர்துமேரி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad