மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

மருதம் நெல்லி ஜெயம் கல்லூரியில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு.


பென்னாகரம் அருகேயுள்ள மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பகடிவதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை வி.சிமிலா வரவேற்று பேசினார். ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி மற்றும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நா.மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் எஸ்.குமரவேல்  பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அவர் பேசுகையில் "  முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் சேர்ந்து உடலாலும் மனத்தாலும் துன்புறுத்தினால் இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் 10 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் செய்தால் இதற்கு போக்சோ சட்டம் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் உடலும், உள்ளமும் மேம்பட விளையாட்டில் ஈடுபட வேண்டும். நல்ல சிந்தனையை மனதில் வைத்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்  என்றார்." நிறைவாக முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி எம்.நந்தினி நன்றி கூறினார். நிகழ்வை வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் சு.ரகுபதி தொகுத்து வழங்கினார்.


நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad