தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 ஜூலை, 2024

தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை (NH 44)  பாளையம் சுங்கச்சாவடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் 25.07.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து,  உயர் மட்ட பகுதி தொடங்கும் இடமான கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நடந்த இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.


பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டம் செயற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி திரு.வீரேந்திர சாம்பியாள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் திரு.சீனிவாசலு, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.லோகநாதன், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad