பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஜூலை, 2024

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்கள்.


காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 58 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவு வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிநிரந்தரம் மற்றும் யுஜிசி நிர்ணயித்த ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்கிட வேண்டும்.


கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து 60 வயது வரை பணியாற்றி சென்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கிட வேண்டும். பணி செய்த காலங்களில் உயிரிழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.


அரசாணை எண் 56-யை அமல்படுத்திட வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடாக நான்கு சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad