தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையம் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையம் திறப்பு.

கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களால் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2024-25 ஆம் கல்வி கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 2620 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


தருமபுரி நகராட்சி  தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஜூலை 2 செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டில்  இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.


இவ்விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) மான்விழி, உதவித் திட்ட அலுவலர்கள் ரவிக்குமார், சம்பத்  வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜீவா, நாசர்,  மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள், ஆசிரியர் பயிற்றுநர்கள் இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள்,  தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad