தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தொட்லாம்பட்டி கிராமத்தில் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவானது கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றி கங்கனம் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நேற்று அம்மனுக்கு கூல் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. முக்கிய இன்று அதிகாலையில் ஊர்மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவை முன்னிட்டு பெண் பக்தர்கள் தீ மிதித்து, அலகு குத்தி மாவிளக்குதட்டு, கரகம் எடுத்து மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபாடு செய்தனர்.
இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள, மந்திரிகவுண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக