இப்பயிற்சியை பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை துறையின் சார்பில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு எஸ்.அருணன் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்து விவசாயிகள் அனைவரும் துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊடுபயிர் சாகுபடி செய்து மகசூலை அதிகரிக்க வேண்டும் என்று அவர் விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
மேலும் பயிற்சியில் அரூர் டிவிஎஸ் தொண்டு நிறுவன உழவியலாளர் திரு பிரம்மா அவர்கள் கலந்து கொண்டு துவரை நாற்று நடவு தொழில் நுட்பத்தியில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்தும், நாற்றுக்களை பராமரித்தல் குறித்தும், இளம் நாற்றுக்களை நடவு செய்வதற்கு முன் கடினப்படுத்துதல் தொழில்நுட்பம் குறித்தும், விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் பயிற்சியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார முன்னோடி துவரை நாற்று நடவு விவசாயி திரு இராவணன் அவர்கள் கலந்துகொண்டு துவரை சாகுபடியில் மகசூல் அதிகப்படுத்த பயன்படுத்த வேண்டிய முக்கிய தொழில்நுட்பமான நுனிக் கிளுதல் குறித்தும் நுனி கிள்ளுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், 2 சதவீத டி ஏ பி கரைசல் தெளித்தலின் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும் பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் திரு தண்டபாணி அவர்கள் கலந்துகொண்டு விதை நேர்த்தி தொழில்நுட்பம் குறித்தும். துவரை நாற்று நடவில் பாலிதீன் பைகளை பயன்படுத்தி விதைகளை விதைப்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தார். மேலும் இப் பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் கலந்துகொண்டு பசுந்தாள் உரப் பயிர்கள் குறித்தும் உயிர் உரங்கள் குறித்தும் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி இடுப்பொருட்கள் முன்பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார் மேலும் பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு சண்முகம் மற்றும் திருப்பதி ஆகியோர்கள் கலந்து கொண்டு பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்து இட வேண்டிய அவசியம் குறித்து விளக்கம் அளித்தனர்.
இப் பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பல்வேறு சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக