K. வெற்றி தொண்டு நிறுவனம் சார்பாக அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 ஜூலை, 2024

K. வெற்றி தொண்டு நிறுவனம் சார்பாக அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி


தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட E.அக்ரஹாரம் கிராமத்தில் டாக்டர், ஏபிஜேஅப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி வெற்றி தொண்டு நிறுவனம் சார்பாக  சமூக சேவையில் ஈச்சம்பாடி பாலம் தூய்மை பணியில் ஈடுபட்டோர்க்கு, மற்றும் இல்லம் தேடிய கல்வியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு   பேக், வாய்ப்பாடு, பென்சில் பாக்ஸ், மற்றும் நினைவு பரிசு சான்றிதழ்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  திருமதி,கங்கா சக்கரவர்த்தி பேசுகையில்,  இளம் தலைமுறையினர் சமூக சேவையில் ஈடுபட வேண்டும், வயதான முதியோர்கள் மீது பரிவு  காட்ட வேண்டும், போதைப் பொருளை பற்றி தனது பெற்றோர்களுக்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு செய்ய வேண்டும், மேலும் கெலவள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் சாக்கம்மாள் பேசுகையில், மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும், பெற்றோர்களை மதிக்க வேண்டும், கிராமப்புற பகுதிகள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட வேண்டும், என கூறினார்.


இந்நிகழ்ச்சியில் K.வெற்றி தொண்டு நிறுவனம் சார்பாக திருமதி.கங்கா சக்கரவர்த்தி, சாக்கம்மாள் (கெலவள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் ), தீ.திருப்பதி (இந்திய ராணுவம் ஓய்வு), ஓ.உதயண்ணன் (அதியமான் அரண்மனை தருமபுரி), மற்றும் சசிகுமார், மகேந்திரன், லோகேஷ்,தருண், நா. சின்னமணி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இறுதியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

கருத்துகள் இல்லை:

Post Top Ad