முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் MRK. பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூலை, 2024

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11.07.2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டம் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் இன்று (04.07.2024) பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மனுக்கள் பெற துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகள், மேடை அமைய உள்ள இடம், பயனாளிகளை அழைத்து வரும் வாகனங்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.


இந்த ஆய்விற்கு பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு 3 முறை வருகை புரிந்து, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இம்மாவட்டத்திற்கு வழங்கியுள்ளார். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் 24.07.2023 அன்று துவக்கி வைத்தார்.


மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ரூ.17.58 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வத்தல்மலை மலைவாழ்மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான பேருந்து வசதி, சாலை வசதி, வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள், வங்கி கடன் உதவிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்துள்ளார்.


மேலும், வருகின்ற 11.07.2024 அன்று ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மற்றும் அரசின் சேவைகளை மக்களுக்கு விரைவாகச் சேர்த்திட மக்களை நாடிச் செல்லும் தமிழ்நாடு அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்டத்தினை துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய நகர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து, விவசாயிகள், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க உள்ளார்கள் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு இதே தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களை துவக்கி வைத்து, பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து அவர்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என சுழல் நிதிகளை வழங்கி பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார்.


அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இன்று ஆலமரம் போல் படர்ந்து உள்ளது கலைஞர் வழியில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் அறிவித்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தினால் இன்று 1 கோடியே 18 லட்சம் குடும்பத் தலைவிகள் உரிமைத்தொகை மாதம் ரூ. 1000 பெற்று பயனடைந்து வருகிறார்கள் என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வின் போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் திரு.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தனித்துணை ஆட்சியர் திருமதி.தனப்பிரியா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் திரு.செல்வம், அனைத்து துறைகளின் முதல் நிலை அலுவலர்கள், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.மாதுசண்முகம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.துரைசாமி, வட்டாட்சியர் திருமதி.பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் திரு.சுப்பிரமணியன், திரு.விஜயராகவன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad