பாலக்கோடு பேரூராட்சி 10 வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா - பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

பாலக்கோடு பேரூராட்சி 10 வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மர் திறப்பு விழா - பொதுமக்கள் பெரு மகிழ்ச்சி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 10வது வார்டு, பள்ளிகூடத்தான் காலணியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்விநியோகம் செய்து வந்தனர்.


ஆனால் வீடுகளின் அதிகரிப்பிற்க்கு ஏற்றவாறு கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படாததால்,  போதிய அளவிற்க்கு மின்சாரம் இன்றி, குறைந்த தாழ்வழுத்தம் ஏற்பட்டு டிவி, பேன், மிக்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி வந்தன. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூடுதலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி மின் வாரியத்திற்க்கு கோரிக்கை விடுத்திருந்தனர். 


இவர்களது கோரிக்கையை ஏற்று வெள்ளி சந்தை துணை மின் நிலைய  செயற்பொறியாளர் வனிதா, தலைமையில் இன்று பள்ளிகூடத்தான் காலணியில் 13 கே.வி. மெகாவாட் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு உதவி செயற்பொறியாளர் அழகுமணி, உதவி பொறியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad