தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஆகஸ்ட், 2024

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை.


தர்மபுரி - பெங்களூர் புதிய தேசிய நெடுஞ்சாலை (844) அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது சாலை பணிகள் தொடங்கிய நாள் முதலே இந்த நெடுஞ்சாலை ஒட்டியுள்ள ஜக்கசமுத்திரம், பொம்மனூர், பந்தார அள்ளி, சின்ன கோடிகாண அள்ளி, பெரிய கோடிகாண அள்ளி, முல்லாபுதூர், ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சரியான முறையில் பயன்படுத்த ஏதுவாக சாலைகளை அமைக்கவில்லை என பல குற்றச்சாட்டுகள்  வைத்து வருகின்றனர். 


இந்நிலையில் ஜக்கசமுத்திரம் அருகே அணுகு சாலை இன்றி பொதுமக்கள் எட்டு கிலோ மீட்டர் சென்று புதிய தேசிய நெடுஞ்சாலைய அடைய உள்ளதால் இராயக்கோட்டை தக்காளி மற்றும் காய்கறி மார்க்கெட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்வதாகவும் நேரம் விரையத்தால் காய்கறி மற்றும் பூக்களை உரிய நேரத்தில் மார்க்கெட் எடுத்துச் செல்ல முடியவில்லை என்று விவசாயிகளும் ஓசூர் பெங்களூர் பகுதிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்படுவதாக  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களிடம் முறையிட்டதுடன் இதற்கு நிரந்தர தீர்வு பெற்று தர வேண்டுமென பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 100 பேர்  எம்பி யிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.  


இந்நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலை மேலாளர் அமித் பங்கேற்க மற்றும் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் நிர்வாகிகள் கணேசன், சலீம், விஜய், ஜே.எம் சக்தி, முனிராஜ், முனிரத்தினம், புருஷோத்தமன், யுவராஜ், ராஜா, சதாசிவம், மாது, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad