மாரண்டஅள்ளியில் 11ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு., தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் கடந்த 2024 பிப்ரவரி, 11ம் தேதி இராயக்கோட்டை அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தியதில் சிறுமி 5 மாத கர்ப்பமானார்.
சிறுமி கர்ப்பமானதை கண்டறிந்த பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக ஊர்நல அலுவலர், சாந்தி இது குறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக