தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள த.அம்மாபேட்டை சென்னம்மாள் கோவில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மெணசியை சேர்ந்த தீர்த்தகிரி (42) என்பவர் புதிதாக வாங்கிய சரக்கு வாகனத்திற்கு கோவிலில் பூஜை செய்வதற்காக புறப்பட்டார்.
அப்போது ஆண்டியூர் பேருந்து நிறுத்தத்தில் கோவிலுக்கு செல்வதற்காக நின்று இருந்தபோது பையர்நாக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 10 ஆண்கள் 5 பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 20 பேர் தீர்த்தகிரியின் சரக்கு வாகனத்தில் ஏறிகொண்டனர், பின்னர் கோயிலுக்கு சென்றனர் அப்போது ஆண்டியூரில் இருந்து அம்மாபேட்டை செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் இருந்த தீர்த்தகிரி உள்பட 20 பேரும் இடுபாடியில் சிக்கிக் கொண்டனர், அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தீர்த்தமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர் மேலும் தீவிர காயம் 6 பேர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரூரில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை எம்எல்ஏ வே.சம்பத்குமார் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் இந்த விபத்து குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக