தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பெயரில் பென்னாகரம் வன அலுவலர் பெரியண்ணன் வனவர் சக்திவேல் புகழேந்திரன், கணேஷ் செல்வகுமார் மற்றும் வனத்துறையினர் பதனவாடி காப்புக்காடு மூல பெல்லூர் பகுதியில் உள்ள டேம் கொட்டாய்வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில், ஈடுபட்டனர். அப்போது ஒரு கும்பல் மானை வேட்டையாடி வனப்பகுதியில்பங்கு போட்டு கொண்டு இருந்தனர்.
வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் மூலபெல்லூர் டேம் கொட்டாய் பகுதியை சேர்ந்த கோவிந்தன் வயது 30, வேடியப்பன் வயது 21, முருகேசன் வயது 47, பெருமாள் வயது 23, தர்மதுரை வயது 28, மாதேஸ் வயது 30, இளங்கோவன் வயது 24, உள்ளிட்ட 23 பேர் ஆண் மானை வேட்டையாடி 23 பங்குகளாக பிரித்தனர் என விசாரணை தெரிய வந்தது.
இதனை அடுத்து அவர்கள் 23 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற்காக 23 பேருக்கும் தலா 15ஆயிரம் வீதம் 3லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக