அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது,கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 24 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால்.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து.இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்களுக்கு நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டது அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.
மேலும் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல் தீட்டு வரை பரிசளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் சுருளிநாதன் மற்றும் சகிலா பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பெண்ணாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஒகேனக்கல் பாலாஜி கூத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர் கூத்தப்பாடி ஊராட்சி செயலாளர் குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக