ஒகேனக்கல்லில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா தொடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

ஒகேனக்கல்லில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா தொடக்கம்.


ஒகேனக்கல்லில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவினை  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  இன்று தொடங்கி வைத்து, 401 பயனாளிகளுக்கு ரூபாய் 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பல்துறை பணி விளக்க கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  தலைமைவகித்தார். 


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை திறந்துவைத்து, பார்வையிட்டார். மேலும், சுற்றுலாத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, வனத்துறை, சமூக நலத்துறை, சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட  பல்துறை பணிவிளக்க முகாம் கண்காட்சியினை பார்வையிட்டார்.


ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவானது இன்று  தொடங்கி  மூன்று நாட்கள்  நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  வருவாய்த்துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.76.10 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைபட்டா, பல்வேறு  உதவித்தொகைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.3.42 இலட்சம் மதிப்பில் வேளாண் நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.56 இலட்சம் மதிப்பிலும், ஊரக நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலும் என பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 85 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.04 கோடி மதிப்பில் கடன் உதவிகளும், வனத்துறையின் சாரப்ல் 5 பயனாளிகளுக்கு ரூ.11.31 இலட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ.51.83 இலட்சம் மதிப்பிலும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.3.30 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளும், சுகாதார துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு குழந்தை ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 401 பயனாளிகளுக்கு 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரத்து 208 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


இவ்விழாவில்  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை சுற்றுலாத்துறையின் சார்பில் இன்று  தொடங்கி வருகின்ற  3 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவினை தொடங்கி வைத்து, கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.


இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் .ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad