தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வாணியாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 500 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு தேங்காய் மற்றும் நிலகடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து உலக வங்கியின் மூலம் 80 சதவீதம் மனியம் மற்றும் விவசாயிகளின் பங்காளிப்பு தொகை 20 சதவீதம் என மொத்தம் 30 இலட்சம் மதிப்பிலான மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும், சூரிய உலர்த்தி, கடலை உடைப்பான், எண்ணெய் பிழியும் இயந்திரங்கள், தானியாங்கி பாட்டில் நிரப்பி இயந்திரங்கள், பவர் டில்லர், பவர் வீடர் பெருத்தப்பட்ட இயந்திர மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று (31.08.2024) திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு, தேங்காய் மற்றும் நிலகடலை கொள்முதல் மற்றும் எண்ணெய் உற்ப்பத்தி மற்றும் விற்பனை குறித்து உழவர் உற்பத்தியாளர்களிடம் கலந்துறையாடி, தாரமான எண்ணெய் வித்துக்களை விவசாயிகளிடம் பெற்று சுத்தமாக சுகாதாரமான முறையில் எண்ணெய் உற்பத்தி செய்து, நல்ல இலாபம் ஈட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆலமரம் பேல் பறந்து விரிந்து வளர்ச்சி அடையே வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வாணியாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் 30 இலட்சம் மதிப்பிலான மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் இயந்திர மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இஆப., அவர்கள் இன்று (31.08.2024) திறந்து வைத்து, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக